Thursday, October 4, 2018

சவூதியில் மாபெரும் கார் ஓட்டப் போட்டி! வெளிநாட்டவர்களுககு விசிட் வீசா வழங்க நடவடிக்கை!


October 04, 2018 

சவுதி அரேபியாவில் எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் தேதி அன்று சர்வதேச கார் பந்தயம் Formula E race, the Saudia Ad Diriyah E Prix near Riyadh என்ற பெயரில் நடைபெறவுள்ளது.

இதுபோன்ற கார் பந்தயங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளின் போது சர்வதேச பார்வையாளர்களை ஆன்லைன் விசிட் விசா மூலம் அனுமதிக்கும் திட்டத்தை சவுதி அரேபியா செயல்படுத்தத் துவங்கியுள்ளது. இதன் மூலம் சவுதிக்கு அன்னிய செலாவணி வருவாய் கிடைக்கும் என அந்த அரசு நம்புகிறது.

மேற்குறிப்பிட்ட கார் பந்தயத்தை நேரில் காண ஆன்லைன் மூலம் டிக்கெட் வாங்கிய வெளிநாட்டு கார் பந்தய ரசிகர்கள் www.sharek.sa/formulae என்கிற இணையதளத்திற்குள் சென்று 640 சவுதி ரியால்களை செலுத்தி (சுமார் 170 டாலர்கள்) 14 நாட்கள் செல்லுபடியாகும் விசாவை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் கார் பந்தயத்தை முழுமையாகவும், சவுதியினுள் வரையரையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ள சில பகுதிகளுக்குள்ளும் சென்று வரலாம்.

ஆன்லைன் விசா விண்ணப்பதாரர்கள் www.sharek.sa/formulae என்ற முகவரிக்குள் சென்று கேட்கப்பட்டுள்ள சுய விபரங்களையும், சுய போட்டோ ஒன்றையும், பாஸ்போர்ட் காப்பியையும் பதிவேற்ற வேண்டும். சில நொடி நேரங்களிலேயே சவுதி வெளியுறவுத்துறை விபரங்களை சரிபார்த்து ஒப்புதல் வழங்கிய பின் விசா கட்டணத்தை செலுத்தினால் உங்களுடைய ஈமெயில் முகவரிக்கு ஆன்லைன் விசா காப்பி அனுப்பப்படும். இந்த விசா காப்பியை நகலெடுத்து சவுதியினுள் நுழைய பயன்படுத்திக் கொள்ளலாம்.

www.sharek.sa/formulae என்ற இணையதள முகவரியில் வெளிநாட்டு கார் பந்தய ரசிகர்கள் டிக்கெட் வாங்கலாம். டிக்கெட் விலைகள் 395 ரியால்கள் முதல் துவங்குகின்றன. ஒரு வெளிநாட்டு ரசிகருக்கு 1 டிக்கெட் என்ற அடிப்படையிலேயே வழங்கப்படுவதுடன் இந்த அடிப்படையிலேயே விசாவும் வழங்கப்படும்.

Source: Saudi Gazette

0 comments:

Post a Comment