October 04., 2018
நமது பெண் பிள்ளைகளின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகும் விடையத்தில் ஊர் உலமா சபை கவனம் செலுத்த வேண்டும், நம்பிக்கையாளர் சபை கவனம் செலுத்த வேண்டும், பொலிஸில் முறைப்பாடு செய்ய வேண்டும், பெண்களுக்கு ஸ்மாட் போன் கொடுக்கக் கூடாது, தனி அறை கொடுக்கக் கூடாது, வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் மற்றும் விழிப்புணர்வு குத்பா பிரச்சாரங்கள் செய்ய வேண்டும் என்பதற்கு அப்பால் நாம் ஒவ்வொருவரும் திறந்த மனதோடு சிந்திக்க வேண்டிய சில விடையங்கள் இருக்கின்றது.
இதனை பெற்றோரும், பெண்-ஆண் பிள்ளைகளும் கண்டிப்பாக உணர்ந்திருக்க வேண்டும்.
01. தன் மகளுக்கு ஒரு மாப்பிள்ளை பேசி விட்டால் பெற்றோர்கள் திருமணத்தினை உடனே தாமதிக்காது முடித்துக் கொடுத்து விட வேண்டும் மாதக்கணக்கில் வருடக்கணக்கில் என தாமதம் செய்யக் கூடாது. அவ்வாறு தாமதிப்பதினால் பெண்னுக்கும்-மாப்பிளைக்கும் இடையில் உள்ள தொலைபேசி தொடர்பு அதிகமாகி அதனுாடாக அந்தரங்கள்கள் பகிரப்பட வாய்ப்புள்ளது, பகிரப்பட்டும் உள்ளது.
02. தன் மகளுக்கு மாப்பிள்ளை பேசிவிட்டு இருவரையும் தொலைபேசியில் பேச அனுமதியும் அளித்து விட்டு இறுதியில் வேறு ஒரு அரசதொழில் அல்லது செல்வந்த மாப்பிளை வந்தவுடன் வேறு தட்டு மாற்றுவது நிறுத்தப்பட வேண்டும். இப்படி ஏமாற்றப்பட்ட சில மாப்பிள்ளைகளாலும் அந்தரங்கள் பகிரப்பட வாய்ப்புள்ளது, பகிரப்பட்டும் உள்ளது.
03. ஒரு பெண் பெற்றோருக்குத் தெரியாமல் காதல் வயப்பட்டிருந்தால் முதலில் அதுபற்றி விசாரித்து அந்த காதலனின் நடத்தை, குடும்பப் பிண்ணணி பற்றி அறிந்து அவர் நல்லவராக இருந்தால் அவரையே அந்தப் பெண்னுக்கு பேசி முடிக்க வேண்டும் அவ்வாறில்லாமல் பெற்றோரின் திணிப்பினால் அந்தப் பெண்னுக்கு வேறு ஒருவரோடு திருமணம் நடந்தால் அந்தக் காதலனால் அந்தரங்கங்கள் பகிரப்பட வாய்ப்புள்ளது பகிரப்பட்டும் உள்ளது.
04. திருமணமான பெண் தன் கணவனிடமும் திருமணமாகாத பெண் தன் பெற்றோர்களிடம் எதிர்பார்க்கும் தனக்கே உரிய அன்பு-பாசம்-அக்கறை போன்றவற்றை தாரளமாக வழங்கி விட வேண்டும் அது குறையும் பட்சத்தில் அதனை அதிகமாக வேறு ஒருவர் கொடுக்கும் போது அவர்களது மனம் தள்ளாடி அவர் பால் ஈர்ப்புக் கொண்டு ஈற்றில் இவ்வாறு அந்தரங்கங்கள் அந்தரத்தில் தொங்க வாய்ப்புள்ளது, தொங்கப்பட்டும் உள்ளது.
05. சில பெண்கள் ஒருவனை காதலித்து விட்டு இவனை விட மேலானதாக ஒருவனைக் கண்டு முந்தையவனை கழற்றி விட்டு புதியவனை கரம் பிடிப்பதனாலும் முன்னைய காதலனால் குறித்த பெண்ணின் அந்தரங்கங்கள் பகிரப்பட வாய்ப்புள்ளது, பகிரப்பட்டும் உள்ளது.
06. தனது தொலைபேசிகளுக்கு வரும் தவறான அழைப்புக்களை கண்டு கொள்ளாது கவனம் செலுத்துவதன் மூலமும் தேவையற்ற ஆண் தொடர்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது இதனாலும் அந்தரங்கக் கசிவு, ஓடிப் போதல் சம்பங்கள் என ஏற்படுகிறது, ஏற்பட்டும் இருக்கின்றது.
நான் மேலே லிஸ்ட் போட்டுக் காட்டிய இந்த விடையங்கள் மீது நாம் ஒவ்வொருவரும் அதி கூடிய கவனம் செலுத்த வேண்டும் காரணம் வெளிவந்த ஒவ்வொரு அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களுக்குப் பின்னாலும் பழிவாங்கள் காரணங்கள் இருப்பதனை நம்மால் உணர முடிகின்றது.
இந்த இடத்தில் உளவியல் ரீதியான இன்னுமொரு உண்மையினை சொல்கின்றேன் திருமணம் பேசி முடித்த ஒரு பெண் தன் அந்தரங்கங்களை திருமணத்திற்கு முதலே வீடியோவில் தன் மாப்பிள்ளைக்கு காட்டி தொலைபேசித் தொடர்பு வைப்பது அந்தப் பெண்னுக்கே ஆபத்தாகவும், ஏமாற்றமாகவும் அமைந்து விட வாய்ப்புள்ளது.
காரணம்,
”திறந்து கிடக்கும் ஒரு பொருளை பார்க்க ஆசை வருவதை விட மூடி வைக்கப்படும் ஒரு பொருளை பார்க்கவே அதிக ஆவலும் ஆசையும் ஒரு ஆணுக்கு வரும், திருமணத்திற்கு பிறகு பார்க்க வேண்டிய செய்ய வேண்டிய அந்தரங்க செயற்பாடுகளை திருமணத்திற்கு முன்னரே தொலைபேசி வாயிலாக மாப்பிள்ளைக்கு காட்டுவதனால், செய்வதனால் அந்தப் பெண் மீதான தாம்பத்திய ஆர்வமும், ஆசையும் நிச்சயம் மாப்பிள்ளைகளுக்கு குறைந்து விடும் ( சில பெண்களுக்கு இது விளங்குவதில்லை) இதனால் நாம் ஏற்கனவே பார்த்ததுதானே திருமணம் முடித்தாலும் இதைத்தான் பார்க்கப் போகின்றோம் என்ற சலிப்பு மாப்பிள்ளைக்கு ஏற்படும் இருவருக்குல்லும் கருத்துவேறுபாடுகள் நிலவி அது அவர்களது பிரிவுக்கும் காரணமாகி விடும்.
இறுதியாக சில விடையத்தினை சொல்லி விட்டு முடிக்கின்றேன்,
திருமண விடையத்தில், காதல் விடையத்தில் எப்படித்தான் தனக்கு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், வஞ்சிக்கப்பட்டாலும் ஒரு பெண்ணின் அந்தரங்கத்தோடு விளையாடுவதனை நல்ல தாய் தகப்பனுக்குப் பிறந்த எந்த ஆண் மகனும் செய்ய மாட்டான் இத்தகையவர்கள் தங்களது வீடுகளிலும் பெண்கள் இருக்கின்றார்கள் என்பதனை நினைத்துப் பார்க்க வேண்டும் நீங்கள் சாதரணமாக அந்தப் பெண்ணின் அந்தரங்கங்களை பரப்பி விட்டு விடுவீர்கள் அதனால் அந்தப் பெண்ணின் எதிர்காலத்தினை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள் உங்களுக்கு வேறு பெண் கிடைத்து விடுவாள் ஆனால் அவர்களுக்கு வேறு மாப்பிள்ளை கிடைத்து விடுமா...?? அவர்கள் எதிர்காலம் அழிந்தே விடுமே. அப் பெண்ணின் குடும்பத்தாரின் நிலையினையும் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.
நடைபெறுகின்ற இவ்வாறான ஓரிரு சம்பவங்களை நாமெல்லாம் நமக்கான, நம் பெண் பிள்ளைகளுக்கான நல்ல படிப்பினையாக எடுத்து இது பற்றி நம் பெண் பிள்ளைகளுக்கு அறிவுருத்த வேண்டியது நம் அனைவரது கடமையாகும். எப்படித்தான் மார்க்கப் பற்றுப் பெண்ணாக, ஒழுக்க சீலப் பெண்ணாக நம் பெண் பிள்ளைகளை நாம் வளர்த்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகள், வயதுக் கோளாருகள், எதிர்ப்பாலின ஈர்ப்புக்கள் அவர்களை இவ்வாறான சம்பவங்களில் தள்ளிவிடுகின்றது.
நம் குடும்பத்தில் இருக்கும் பெண்களின் மான-மரியாதைகளை எல்லாம் வல்ல இறைவன் பாதுகாப்பானாக - ஆமீன்.
இச் செய்தியினைப் பற்றி பேசாது மூடி மறைப்பது எனக்குச் சரியாகப்படவில்லை அதனால்தான் இன்று தைரியமாக எழுதி விட்டேன் காரணம் எனது வீட்டிலும் பெண் பிள்ளைகள் இருக்கின்றார்கள்.
நன்றி
சம்மாந்துறை அன்சார்.






0 comments:
Post a Comment