Saturday, October 6, 2018

இலங்கையில் மோசமான காலநிலை - 8 இலட்சம் பேர் பாதிப்பு, ஐவர் பலி!

2018-10-07

நாட்டில் தொடரும் சீரற்ற கால­நி­லை­யினால் மக்­களின் இயல்­பு­வாழ்க்கை பாதிப்­ப­டைந்­துள்­ளதுடன் 237,940 குடும்­பங்­களை சேர்ந்த 803,516 பேர் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளனர். ஐவர் பலி­யா­கி­யுள்­ளனர்.

மண்­ச­ரிவு மற்றும் வெள்ளம்  கார­ண­மாக 6 வீடுகள் முற்­றாக சேத­ம­டைந்­துள்­ள­துடன் 1,046 வீடுகள் பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்­ள­தாக இடர் முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது.

நாட்டில் தொடரும் சீரற்ற கால­நி­லை­யினால் மக்­களின் இயல்­பு­வாழ்க்கை பாதிப்­ப­டைந்­துள்­ளதுடன் 237,940 குடும்­பங்­களை சேர்ந்த 803,516 பேர் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளனர். ஐவர் பலி­யா­கி­யுள்­ளனர். மண்­ச­ரிவு மற்றும் வெள்ளம் கார­ண­மாக 6 வீடுகள் முற்­றாக சேத­ம­டைந்­துள்­ள­துடன் 1,046 வீடுகள் பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்­ள­தாக இடர் முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது.

இந்த சீரற்ற கால­நிலை அடுத்த சில தினங்­க­ளுக்கும் தொடரும் என்­பதால் மலைப்­பாங்­கான மற்றும் சரி­வுகள் ஏற்­படும் அறி­கு­றிகள் தென்­படும் பகு­தி­களில் வாழும் மக்கள் தொடர்ந்தும் விழிப்­புடன் இருப்­பது அவ­சி­ய­மாகும் என இடர் முகா­மைத்­துவ மத்­திய நிலையம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

அதி­க­ரிக்கும் மழை­வீச்­சியின் கார­ண­மாக பல பாகங்­களில் நீர்த்­தேக்­கங்­க­ளிலும் நதி­க­ளிலும் நீரின் அளவு அதி­க­ரித்து வரு­கின்­றது. இவ்­வாறு நீர் மட்டம் அதி­க­ரித்­தாலும் வெள்ளம் ஏற்­படும் அபாயம் இது­வ­ரையில் ஏற்­ப­ட­வில்லை. நீர்த்­தேக்­கங்­களின் நீர்­மட்­டங்­களும் சடு­தி­யாக அதி­க­ரித்­தி­ருக்­க­வில்­லை­யென தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை, நாட்டின் பல பாகங்­களில் நேற்று பெய்த கடும் மழை­யினால் கொழும்பு உள்­ளிட்ட பல நக­ரங்­களின் புற வீதிகள் நீரில் மூழ்­கி­யுள்­ள­தாக இடர் முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் பணிப்­பாளர் பிரதீப் கொடிப்­பிலி தெரிவித்தார்.

இதுவரையில் பதுளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மாத்திரம் மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் பாரியளவு அனர்த்தங்கள் ஏற்படவில்லையென்றும் மேலும் தெரிவித்தார்.

      

0 comments:

Post a Comment