Sunday, September 2, 2018

விலை அதிகரிப்பை மேற்கொள்ளவில்லை

02.09.2018

விலை அதிகரிப்பை கோதுமை மா தயாரிக்கும் நிறுவனம் எழுத்து மூலம் தமக்கு அறிவிக்காமை காரணமாக, வெதுப்பக தயாரிப்பு பொருட்களின் விலை அதிகரிப்பை மேற்கொள்ளவில்லை என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் எஸ்.கே ஜயவர்தன எமது செய்தி சேவைக்கு இதனை தெரிவித்தார்.

இது குறித்து திங்கட்கிழமை இடம்பெறவுள்ள, வெதுப்பக உரிமையாளர்கள் குழு கூட்டத்தின் போது கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டிருக்குமாயின், அதன் மூலம் தயாரிக்கப்படும் வெதுப்பக பொருட்களின் விலைகளையும் அதிகரிப்பது தொடர்பில் குறித்த குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

கோதுமை மா கிலோ ஒன்றின் விலை 5 ரூபாவினால் நேற்று முந்தினம் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

0 comments:

Post a Comment