September 02, 2018
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் திருமணமான அடுத்த நொடியில் மணப்பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரபிகா பனு என்ற இளம் பெண்ணுக்கு இரு தினங்களுக்கு முன்னர் இளைஞர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு பின்னர் தந்தை வீட்டுக்கு கணவருடன் வந்த ரபிகா, பின்னர் கணவர் வீட்டுக்கு செல்ல காரில் ஏற முயன்றார்.
அப்போது திடீரென அவர் சுருண்டு விழுந்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு ரபிகா தூக்கி செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே கடுமையான மாரடைப்பால் இறந்துவிட்டது தெரியவந்தது.
ரபிகாவின் சடலத்தை பார்த்து அவரின் கணவர் கதறி அழுதார்.
புதுப்பெண்ணாக கணவர் வீட்டுக்கு செல்ல வேண்டிய ரபிகா, மயானத்துக்கு சடலமாக கொண்டு செல்லப்பட்டது வேதனையளிப்பதாக ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment