September 01, 2018
தற்காலிக வாக்காளர் இடாப்பில் தமது பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
தற்காலிக வாக்காளர் இடாப்பு, மாவட்ட தேர்தல்கள் அலுவலகம், பிரதேச செயலகம், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் அலுவலகங்களிலும் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் இணையதளமான http://elections.gov.lk என்ற இணையத்தளத்திலும் வாக்காளர் இடாப்பை பார்வையிட முடியும். இந்த ஆவணத்தில் தமது பெயர் உள்ளடக்கப்படவில்லையாயின், எதிர்வரும் வியாழக்கிழமைக்கு முன்னர் அது தொடர்பாக அறிவிக்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
0 comments:
Post a Comment