Saturday, September 1, 2018

கல்முனையில் நவீனகரமான முறையில் அமைக்கப்பட்டு வரும் "பீச் பார்க்" விரைவில் பொதுமக்கள் பாவனைக்கு ...

Sep.01, 2018

கல்முனையில் நவீனகரமான பல வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் "பீச் பார்க்" வேலைப்பணிகளை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று(31) வெள்ளிக்கிழமை மாலை நேரில் சென்று பார்வையிட்டதுடன் அபிவிருத்தி பணிகள் சம்மந்தமாக அதிகாரிகளுக்கு விஷேட பணிப்புரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

மேலும் பொதுமக்களின் நன்மை கருதி,சகல இன மக்களுக்கு நாளாந்தம் நன்மை தரும் வகையில் கல்வி,கலை,கலாச்சாரம் ஆகிய அம்சங்களுடன் பீச் பார்க் அமைக்கபடுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் இதில் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.ரக்கீப் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம்.பைறோஸ்,சட்டத்தரணி ஏ.எம்.றோஸன் அக்தார்,எம்.எஸ்.எம் நிசார்,ஏ.சீ சாத்தார் மற்றும் கல்முனை மாநகரசபையின் திட்ட பொறியியலாளர் எம்.சாஹீர் மற்றும் தொழில்நூட்ப உத்தியோகத்தர் எம்.அமான்  மற்றும் தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான கே.எம். தௌபீக், நௌபர் ஏ. பாவா என பலர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

நன்றி
(எம்.என்.எம்.அப்ராஸ்)

0 comments:

Post a Comment