17.08.2018
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்ற பின்னரே அரசாங்கம் ஆட்சிக்கு வந்து தனது மூன்றாண்டை கொண்டாட முயற்சிப்பதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க தெரிவித்துள்ளார்.
வீரக்கொட்டிய மெதமுலன பிரதேசத்தில் நேற்று நடை &பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர். ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ளன. எனினும் வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
அரசாங்கம், ராஜபக்ச குடும்பத்தினரை பழிவாங்கி வருகிறது. நாட்டில் வரிகளை அதிகரித்துள்ளது. தேசிய வளங்களை விற்பனை செய்வதை மறைக்க முயற்சித்து வருகிறது.
ஷிரந்தி ராஜபக்சவிடம் வாக்குமூலத்தை பெற்று அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டாவது ஆண்டை கொண்டாடியது.
தற்போது மகிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலத்தை பெற்று தனது மூன்றாவது ஆண்டை கொண்டாடுகிறது.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் பொய்யான நாடகங்களை அரங்கேற்றி, ஊடக கண்காட்சிகளை நடத்தி வந்ததாக டி.வி.சானக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழ்வின்






0 comments:
Post a Comment