Wednesday, August 1, 2018

மாகாண சபை தேர்தல் முறை தொடர்பில் சிவில் சமூக குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

01 AUGUST 2018

மாகாண சபை தேர்தல் முறையினை ஆராய நியமிக்கப்பட்ட சிவில் சமூக குழுவினால் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கை இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.

நாடாளுமன்ற சபாநாயகர் அலுவலத்தில் வைத்து குறித்த அறிக்கை சபாநாயகருக்கு கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி , பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கட்சித் தலைவர்களுக்கிடையில் இன்று பிற்பகல் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ள விடேச பேச்சுவார்த்தையின் போது இந்த அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment