20 AUGUST 2018 -
முச்சக்கர வண்டிகளை கண்காணிப்பதற்காக எதிர்காலத்தில் ஆணைக்குழு ஒன்றை நியமிக்கவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
குறித்த ஆணைக்குழுவை நியமிப்பதற்கான சட்ட பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்தார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதி கிடைக்கப்பெற்றவுடன் அதனை உடனடியாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.






0 comments:
Post a Comment