August 18, 2018
நாட்டின் பல பகுதிகளிலும் காணப்படும் காற்று, மழை என்பவற்றுடன் கூடிய காலநிலை அடுத்து வரும் நாட்களிலும் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமேல் மாகாணத்திலும் கொழும்பு, கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.






0 comments:
Post a Comment