August 02, 2018
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் பாஸிஸ இனவாத ஆட்சியை ஏற்படுத்த முயன்று வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இலங்கை சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படவிருக்கும் வைத்தியர்களின் வேலைநிறுத்தம் எந்த விதத்திலும் நியாயமானது அல்ல என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் இதற்கு முன்னர் எக்டா ஒப்பந்தத்திற்கும், இந்திய அம்ப்யூலன்ஸ் சேவைக்கும் எதிர்ப்பு தெரிவித்ததாக அவர் கூறினார்
இந்திய அம்ப்யூலன்ஸ் சேவை மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்துள்ளது. இதற்கு முன்னர் இருந்த பாஸிஸ இனவாத ஆட்சியை நாட்டில் மீண்டும் ஏற்படுத்துவது அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இலக்காகும் என்று அவர் மேலும் கூறினார்.
Daily Ceylon






0 comments:
Post a Comment