Saturday, August 18, 2018

குற்றங்களை முழுமையாக கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை..

18 AUGUST 2018 -

நாட்டிலுள்ள சிவில் பாதுகாப்பு அமைப்புகள் சிறப்பாக செயல்பட்டால் குற்றங்களை முழுமையாக கட்டுப்படுத்தமுடியும் என வடக்கு மாகாண  குற்றத்தடுப்பு சிரேஸ்ட காவல்றை அத்தியட்சகர் எஸ்.எஸ்.கணேசநாதன் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள 14 ஆயிரத்து 28 கிராமசேவகர் பிரிவுகள் தோறும் அமைக்கப்பட்டுள்ள சிவில் பாதுகாப்பு அமைப்புகள் சிறப்பாக செயல்பட்டால், குற்றங்களை முழுமையாக கட்டுப்படுத்தமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட காவல்துறையினருக்கு நடத்தப்பட்ட இரண்டு நாள் செயலமர்வில் கலந்துகொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடியே 20 இலட்சமாகவுள்ளது.

நாட்டில் மக்களின் பாதுகாப்பிற்காக 85 ஆயிரம் காவல்துறையினரும், 10 ஆயிரம் விசேட அதிரடிப்படை பொலிஸாருமாக 95 ஆயிரம் பேர் கடமையாற்றுகின்றனர்.

இந்த நிலையில், அதிகரித்துவரும் குற்றச்செயல்களைக்  கட்டுப்படுத்தும் நோக்கில், நாட்டிலுள்ள 14 ஆயிரத்து 28 கிராம சேவகர் பிரிவுகளிலும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுக்களில் கிராமங்கள் தோறும் 25 பேர் அங்கத்தவர்களாக உள்ளனர்.

கிராமங்களில் இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பில், சிவில் பாதுகாப்புக் குழுக்கள் காவல்துறையினருக்கு அறிவிப்பதனால் குற்றச்செயல்களை இனங்கானவும், தடுக்கவும், காவல்துறையினருக்கு முடிவதாக வடக்கு மாகாண  குற்றத்தடுப்பு சிரேஸ்ட காவல்றை அத்தியட்சகர் எஸ்.எஸ்.கணேசநாதன் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment