AUGUST 4, 2018
அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட இருப்பது தொடர்பில் கடந்த தினங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் சபாநாயகர் கரு ஜெயசூரிய விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், சம்பள அதிகரிப்பு தொடர்பில் இது வரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2006 நவம்பர் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சம்பள அதிகரிப்பின் போது எம்.பிகளினதும் சம்பளத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பின்னணியில் அண்மையில் நீதித்துறையில் சம்பள அதிகரிப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டது. எம்.பிகளின் சம்பளத்தையும் இதற்கேற்ப அதிகரிக்க வேண்டும் என சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டது.இது தொடர்பில் சபாநாயகர், பாராளுமன்ற செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
ஆனால் அமைச்சர்களினதும் எம்.பிகளினதும் சம்பளத்தை அதிகரிக்க இது வரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரமா அல்லது வேறு வகையிலா இந்த அதிகரிப்பை முன்னெடுப்பது என்பது தொடர்பில் கட்சித் தலைவர் கூட்டத்தில் ஆராய்ந்து முடிவு எடுக்க முடியும். பாராளுமன்ற உறுப்பினர்களினதும் கருத்துக்களை பெற்று இது தொடர்பில் தீர்மானிக்கலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment