August 17, 2018
லண்டனில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த பெண் ஒருவர் சாவகச்சேரி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
லண்டனில் இருந்து நாடு திரும்பிய 64 வயதான குறித்த பெண், அவருடைய உறவினர்களுடன் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.






0 comments:
Post a Comment