Thursday, August 16, 2018

ஓடிக்கொண்டிருந்த கார் முற்றாக எரிந்து விபத்துக்குள்ளானது

August 17, 2018

யாழ். ஆனைக்கோட்டை - அரசடி பகுதியில் ஓடிக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.

நேற்று (16) இரவு 8 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தின் போது காரில் மின் ஒழுக்கு ஏற்பட்டு புகை கிளம்பியுள்ளது. இதனை அடுத்து காரில் இருந்தவர்கள் இறங்கியுள்ளனர். பின்னர் கார் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.

பின்னர் யாழ். மாநகர சபை தீயணைப்பு பிரிவுக்கு மக்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

எனினும் கார் முற்றாக எரிந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
தெரண

(யாழ். நிருபர் பிரதீபன்)

0 comments:

Post a Comment