20.08.2018
பொது ஜன பெரமுன கட்சியின் கீழ் முஸ்லிம்களுக்காக உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் அமைப்பு என்னும் பெயரில் அண்மையில் பொஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச அவர்களின் தலைமையில் கீழ் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அந்த வகையில் நேற்று19 அம்பாறை மாவட்டத்தில் அமைப்பாளர்கள் ஒன்றுகூடல் பாலமுனை வெஸ்டின் ஹோட்டலில் எம்.எல்.எம்.பாரீன் அவர்களின் தலைமையில் கீழ் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அம்பாரை மாவட்ட பொது ஜன பெரமுன கட்சியின் முஸ்லிம் அமைப்பின் அமைப்பாளர் எம்.ஏ.சஷிநியாஸ், அம்பாறை மாவட்ட இளைஞர்கள் அமைப்பின் தலைவரும் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் எஸ்.எம்.இர்ஷாத் அவர்களும் கலந்து கொண்டனர்.
இதே வேளை இக்கட்சியின் எதிர்கால திட்டம் தொடர்பாகவும் எதிர்வரும் மாதங்களில் பொது ஜன பெரமுன முஸ்லிம் அமைப்பு அறிமுக நிகழ்வு தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment