Friday, August 17, 2018

இலங்கையில் இருந்து தத்துக்கொடுக்கப்பட்டவர்கள் சொந்த பெற்றோரை தேடும் அவலம்

17.08.2018

இலங்கையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தத்துக் கொடுக்கப்பட்டவர்கள், தொடர்ந்தும் தங்களது சொந்த பெற்றோரை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

1980ம் ஆண்டுகளில் நெதர்லாந்து, பிரித்தானியா, ஃப்ரான்ஸ் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கையின் பெற்றோரிடம் இருந்து குழந்தைகள் தத்துக்கொடுக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோதமான ஆவணங்கள் மூலம் அவர்கள் தத்துக் கொடுக்கப்பட்டமையினால், உண்மையான பெற்றோரை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

எனினும் இவ்வாறு தத்துக்கொடுக்கப்பட்ட பலர் தற்போது இளைஞர்களாக இருக்கின்ற நிலையில், அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்து தங்களது பெற்றோரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேநேரம் இலங்கையிலும் இந்த தத்துக்கொடுப்புகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கடந்த வருடம் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment