Friday, August 17, 2018

57 இலச்சம் சமுர்த்தி சமூக பாதுகாப்பு நிதியை மோசடி செய்த 8 பேருக்கும் விளக்கமறியல்

August 17, 2018
 
தலைமையத்தில் சமுர்த்தி சமூக பாதுகாப்பு நிதியில் 57 இலச்சம் ரூபா மோசடிசெய்த அங்கு கடடையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் மற்றும் 6 பெண்கள் உட்பட 8 பேரையும் எதர்வரும் 27 ம் திகதிவரை விளக்கமறியலில் வைகுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஜ.என். றிஸ்வி நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்

மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்திலுள்ள உள்ள தலைமை சமுர்த்தி திணைக்களத்தின் நிதிப்பிரிவில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் கருவப்பங்கேணியைச் சேர்ந்த பிரதாப் என்று அழைக்கப்படும் இளைஞர் ஒருவருடன் சேர்ந்து இலங்கை வங்கியில் சமுகபாதுகாப்புக்காக வைப்பிலிடப்பட்டுள்ள நிதியில் காசோலையில் மாவட்ட அரசாங்க காரியாலய பிரதம கணக்காளர் மற்றும் சமுர்த்தி முகாமையாளர் ஆகிய இருவரினதும் கையொப்பம் இட்டு 57 இலச்சம் ரூபாவை மோசடியாக மாற்றி அதனை புல்லுமலை பிரதேசத்திலுள்ள 6 பெண்களின் மக்கள்வங்கி கிளையில் ஒருவருக்கு 9 இலச்சத்து 50 வீதம் வைப்பிலிட்டு அதனை அவர்களிடம் இருந்து பெற்று மோசடி செய்துள்ளார்

இவ்வாறு மோசடி செய்த பணம் மீட்டகப்பட்டதுடன் இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 8 பேரையும் நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தயபோது இவர்களை எதிர்வரும் 27 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிடடார்

Thanks
(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு மாவட்ட

0 comments:

Post a Comment