Sunday, August 19, 2018

முச்சக்கர வண்டியின் 35 சட்டத்துக்கு நான் எதிர் – நிதி அமைச்சர் மங்கள

August 20, 2018

முச்சக்கர வண்டி ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 35 வயதுச் சட்டத்துக்கு நான் எதிர்ப்பு என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
இச்சட்டம் அநீதியானது. தனக்கு தொழில் புரிவதற்கான எந்தவொரு சந்தர்ப்பமும் இல்லாத போது முச்சக்கர வண்டியொன்றையாவது ஓட்டி தனது வாழ்வாதாரத்தைப் பெற்றுக் கொள்ளும் உரிமையை நாம் வழங்க வேண்டும்.

சாதாரண தரம் படித்தவர்கள் அரசாங்கத்தின் தொழில் வரும்வரை எதிர்பார்த்திருந்தால், அவர்கள் தற்கொலை தான் செய்து கொள்ள வேண்டி வரும். இன்று அரச துறைகளில் தான் தொழில் இல்லாது இருக்கின்றனர். தனியார் துறைகளில் அரச துறையைவிடவும் கூடிய சம்பளத்துக்கு தொழில் நிரம்பியுள்ளன.

வெளிநாட்டில் போய் சாதாரண தொழிலைச் செய்து பெறும் சம்பளத்தை விடவும், உள்நாட்டில் அதே தொழிலுக்கு கூடிய சம்பளம் வழங்கப்படுகின்றது. அதே தொழிலை உள்நாட்டில் செய்வதற்கு வெட்கப்படுகின்றனர் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது கூறினார்.  

0 comments:

Post a Comment