Tuesday, July 17, 2018

பெற்ற பிள்ளைக்கு பியர் கொடுத்து பேஸ்புக்கில் பிரபல்யம் தேடிய தந்தை.....

17 JULY 2018 -

குழந்தைக்கு மதுபானம் பருகச்செய்யும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ள காணொளி இணையத்தளத்தில் அதி வேகமாக பரவியதை நாம் அனைவரும் அறிவோம். 

அந்த வகையில் குழந்தைக்கு மதுபானம் பருகச் செய்த நபர், காவல் துறையினரால் இனங்காணப்பட்டுள்ளார் என காவல் துறை ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார். 

குறித்த நபர் அநுராதபுரம் மீகலேவ – கனன்கமுவ பகுதியை சேர்ந்தவர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 

குறித்த நபர் இனங்காணப்பட்டுள்ளதோடு சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவரிடம் வாய்மூல சாட்சியம் ஒன்றினை பெற்றுக்கொண்டுள்ளதோடு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மதுபானம் அருந்தும் இடத்தில் சிறுவர்கள் உள்வாங்கப்படுவதே தவறான விடயம் என்ற சட்ட நியதி காணப்படுகின்ற நிலையில், குழந்தைக்கு மதுபானம் அருந்த செய்தமை தவறான செயலாகவே அமைகின்றது.
Hiru News

0 comments:

Post a Comment