Monday, July 16, 2018

பெயர்ப்பட்டியலில் உள்ள மரண தண்டனை கைதிகளில் நால்வரின் விபரம் வெளியானது!

17.07.2018

மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகர்களின் விபரங்கள் அடங்கிய பெயர் பட்டியல் ஒன்று நீதியமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பெயர் பட்டிலில் உள்ளவர்களில் நால்வர் பாகிஸ்தான் நாட்டு பிரஜைகள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் விவகாரம் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்டு, தண்டனையை அனுபவித்துவரும் நிலையில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டுள்ள சிறைக்கைதிகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவுக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் போதைப்பொருள் பாவனை வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை கடந்தவாரம் அனுமதி வழங்கியிருந்தது.

இதனையடுத்து, போதைப்பொருள் வியாபாரத்துடன், தொடர்புடைய சிறைக்கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையெழுத்திடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இலங்கையில் மீண்டும் மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு பல்வேறு தரப்புகளும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment