, 02 JULY 2018 -
ஊருபொக்க – கல்பொக்க பிரதேசத்தில் நபரொருவர் இரண்டு வீடுகளுக்குகள் பலவந்தமாக நுழைந்து மேற்கொண்ட கத்தி குத்து தாக்குதல்களில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று இரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்ட 40 வயதான நபர் பின்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் பெரலபனாதர பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான பெண் உயிரிழந்துள்ள நிலையில், படுகாயமடைந்துள்ள 32 மற்றும் 64 வயதான ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்களும் எம்பிலிபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்ட நபர் மன நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அது தீவிரமடைந்ததால் இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.
0 comments:
Post a Comment