Wednesday, July 4, 2018

உடன் அமுலுக்கு வரும் வகையில் விடுமுறைகள் ரத்து..

04.06.2018

யாழ்ப்பாண மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து காவல்துறை அதிகாரிகளினதும் விடுமுறைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று முதல் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இந்த விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இயங்கும் சட்டவிரோத குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர எதிர்வரும் 7ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment