Wednesday, July 4, 2018

விஜயகலாவுக்கு இன்று நடக்க போவது என்ன..?

, 04 JULY 2018

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஸ்வரன் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில்விக்ரமசிங்கவை இன்று சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளை ஆதரித்து அவர் வெளியிட்டிருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அத்துடன் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஒன்றிணைந்த எதிரணி நேற்று நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், இன்றுவரையில் நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் அவர் மீதான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யுமாறு, சட்ட மா அதிபருக்கு சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார்.

அதேநேரம் அவரை தற்காலிகமாக அமைச்சுப் பதவியில் இருந்து இடைநிறுத்துமாறு பிரதமர், ஜனாதிபதியை நேற்று கோரி இருந்தார்.

இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இன்றையதினம் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஸ்வரனும் நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அவ்வாறான உரையை நிகழ்த்துவதற்கு முன்கூட்டியே நாடாளுமன்ற செயலாளருக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்றபோதும், இதுவரையில் தமக்கு அவ்வாறான அறிவிப்பு கிடைக்கவில்லை என்று நாடாளுமன்ற செயலாளர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment