27.10.2018
பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கே, தமது ஆதரவை வழங்கவுள்ளதாக, தமிழ் முற்போக்குக் கூட்டணி முடிவெடுத்துள்ளது என, தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி, புதிய பிரதமராக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவைத் தொடர்ந்து, இரு தரப்புகளும், தங்களுக்கான ஆதரவைத் திரட்டுவதில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், இது தொடர்பில் என்னவாறான முடிவை எடுப்பது என்பது தொடர்பில், 6 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் முற்போக்குக் கூட்டணி, அதன் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் கூடி ஆராய்ந்தது. இதன்போதே, தற்போது உள்ளதைப் போன்று, ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவைத் தொடர்வது என்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.






0 comments:
Post a Comment