July 8, 2018
ரஷ்யாவில் இடம்பெறும் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் காலிறுதிப் போட்டிகள் நேற்று நிறைவுக்கு வந்தன.
நேற்று இடம்பெற்ற இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் குரோஷியா அணிகள் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
சுவீடன் மற்றும் இங்கிலாந்து அணிக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. போட்டி ஏற்பாட்டு நாடான ரஷ்யா மற்றும் குரோஷியா அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் இரு அணிகளும் 2-2 என்ற கோல்களை பெற்றுக்கொண்டன. அதனை அடுத்து பெனால்டி முறையில் 4-3 என்ற பெனால்டி கோல் கணக்கில் குரோஷியா வெற்றியீட்டி அரையிறுதிக்குள் நுழைந்தது.
இதேவேளை, நேற்று முன்தினம் இடம்பெற்ற காலிறுதிப் போட்டிகளில் உருகுவே மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கிடையில் நடந்த போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றியீட்டியது. மற்றுமொரு போட்டி பெலிஜியம் – பிரேசில் அணிகளுக்கிடையில் இடம்பெற்றது. இப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வெற்றியீட்டியது.
இந்நிலையில் அரையிறுதிப்போட்டிகள் எதிர்வரும் 10 மற்றும் 11ம் திகதிகளில் இடம்பெறவுள்ளன. அரையிறுதியில் பிரான்ஸ் – பெல்ஜியம் மற்றும் குரோஷியா – இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment