Sunday, July 8, 2018

அம்பாறை குளத்தில் படகு விபத்து, 4 பேரைக் காணவில்லை-பொலிஸ்


July 8, 2018

அம்பாறை எக்கல்ஓயா குளத்தில் இன்று காலை 7.00 மணியளவில் படகொன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் படகில் 9 பேர் பயணித்துள்ளனர். தற்பொழுது வீசி வரும் வேகமான காற்றினால், படகை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் போயுள்ளதாகவும் இதனாலேயே அந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

ஏனைய ஐவரும் கரையை அடைந்துள்ளனர். காணாமல் போயுள்ளவர்களில் அதிபர், ஆசிரியர், பாடசாலை சிற்றூழியர் உட்பட மாணவர் ஒருவரும் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது. 

Daily Ceylon

0 comments:

Post a Comment