Sunday, July 8, 2018

கட்சிக்குள் ராஜபக்ஷ ஆதிக்கம், ஸ்ரீ ல.சு.கட்சியில் அணி திரளவுள்ள மஹிந்த தரப்பினர்

July 8, 2018

கூட்டு எதிர்க் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளுராட்சி சபையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைய தயாராகவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷமன் பியதாச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினுள் காணப்படும் ஜனநாயகம் கூட்டு எதிர்க்கட்சியிலோ, பொதுஜன பெரமுனவிலோ காணப்படாதிருக்கின்றமை இவ்வாறு மீண்டும் அவர்கள் ஸ்ரீ ல.சு.கட்சிக்குள் வருவதற்கு காரணமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவுக்குள் ராஜபக்ஷ குடும்பத்தின் ஆதிக்கம் இருப்பதனால், தாம் திருப்தியின்றி இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளதாகவும் ரோஹண லக்ஷமன் பியதாச தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment