Monday, July 23, 2018

சஷிந்ர ராஜபக்ஸ எதிர்க்கட்சி ஆசனத்தில்

23 JULY 2018

ஊவா மாகாண சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் மூன்று பேர் சுயாதீன உறுப்பினர்களாக எதிர்கட்சியில் அமர்ந்துள்ளனர்.

இன்று இடம்பெற்ற மாகாண சபையின் மாதாந்த அமர்வின் போது, மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சஷிந்ர ராஜபக்ஸ, முன்னாள் சுகாதார அமைச்சர் குமாரசிறி ரத்நாயக்க உள்ளிட மூவரே இவ்வாறு எதிர்கட்சியில் அமர்ந்துள்ளனர்.

ஊவா மாகாண சபை உறுப்பினர்களை எந்த தருணத்திலும் தமக்கு விலைக்கு வாங்க முடியும் என மாகாண முதலமைச்சர் ஷாமர சம்பத் தஸநாயக்க கடந்த தினம் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர்கள் எதிர்கட்சி தரப்பில் அமர்ந்துள்ளனர்.

0 comments:

Post a Comment