, 23 JULY 2018 -
மொரகஹகந்தை – களுகங்கை நீர்த்தேக்க திட்டத்தின் களுகங்கை நீர்த்தேக்கத்திற்கு நீர் நிரப்பும் நடவடிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
மாத்தளை – களுபஹன பிரதேசத்தில் ஆரம்பிக்கும் களுகங்கை, லக்கல – பல்லேகம பிரதேசத்தில் இடைமறிக்கப்பட்டு களுகங்கை நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இரண்டு லட்சத்து 880 சதுர அடி பரப்பளவில் இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மொரகஹகந்த களுகங்க நீர்த்தேக்கத்தை, குலசிங்ஹ நீர்த்தேக்கமாக பெயரிடும் நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
புதிய தொழிநுட்பங்களுடன் கட்டுமான முறைகளை அறிமுகம் செய்த பொறியியலாளர் கலாநிதி ஏ.என்.எஸ். குலசிங்ஹ என்பவரை நினைவுகூறும் பொருட்டு மொகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு குலசிங்ஹ நீர்த்தேக்கம் என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மொகஹகந்த – களுகங்கை வேலைத்திட்டத்தின் ஊடாக 25 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பிற்குள் உள்வாங்கும் பணி இன்று ஜனாதிபதியால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.






0 comments:
Post a Comment