, 23 JULY 2018
மொனராகலை – தெமகம நந்தபுராவ பிரதேசத்தில் 60 வயதான வயோதிப பெண்ணை கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான நபரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் குறித்த பெண்ணின் வீட்டுத்தோட்டத்தில் தேங்காய் பறிக்க வந்தவர் என தெரியவந்துள்ளது.
அந்த வயோதிப பெண் கழிவறைக்கு சென்று கொண்டிருந்த வேளை சந்தேக நபர், பலவந்தமாக அவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிபில நீதவான் நீதிமன்றத்தில் நேற்று பிரசன்னப்படுத்தப்பட்டு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.






0 comments:
Post a Comment