06 JULY 2018
எரிபொருள் அதிகரிப்புக்கேற்ப பேருந்து கட்டணங்கள் உயர்தப்பட வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் கோரியுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக குறுந்தூர சேவைக்காக 500 முதல் 750 ரூபா வரையும், தூர சேவைக்காக 1200 முதல் 1500 ரூபா வரையும் நட்டம் ஏற்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதற்காக கனிய எண்ணெய் வள கூட்டுத்தாபனம் அனுமதி வழங்கியுள்ளதாகவும், அந்த அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் மண்ணெண்ணையின் விலையில் எந்த விதமாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
எதிர்காலத்திலும் மண்ணெண்ணை விலை அதிகரிக்கப்பட மாட்டாது எனவும், விலை சூத்திர குழுவின் பேச்சாளர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
விலை சூத்திரத்திற்கு அமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி மீண்டும் எரிபொருளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 10 ஆம் திகதி எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment