06.07.2018
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட தங்கம் மற்றும் போதைப்பொருட்கள் மூலம் அரசாங்கத்திற்கு 724 மில்லியன் ரூபா வருமானமாக கிடைத்துள்ளது.
சுங்க பிரிவின் ஊடக பேச்சாளர் சுனில் ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 6 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே இந்த வருமானம் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது நான்கு மடங்கு அதிகரிப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment