Sunday, July 8, 2018

சட்டவிரோதமாக வெளிநாட்டவருக்கு பாதுகாப்பு வழங்கினால் கடுமையான சட்டம்- சவுதி

July 09, 2018

சவுதி அரேபியாவுக்குள் வெளிநாட்டவரை சட்ட விரோதமான முறையில் தங்கவைத்துக் கொண்டு தொழில் பெற்றுக் கொடுக்கும் நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சவுதி வெளிவிவகார அனுமதிச் சீட்டு வழங்கும் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

சட்டவிரோதமாக தங்கியிருக்கும் நபர்களுக்கு பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடு மற்றும் உதவிகள் வழங்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அச்சபை தெரிவித்துள்ளது.

இவ்வாறு பாதுகாப்பு வழங்கும் சவுதியைச் சேர்ந்த நபருக்கு எதிராக 15 ஆயிரம் ரியாலுக்கும் அதிகமான தொகையை தண்டப்பணமாக அறவிடுவதற்கும், இவ்வாறான குற்றச் செயலில் ஈடுபடுபவர் வெளிநாட்டவர் எனின், அவரை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கும் சவுதி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

0 comments:

Post a Comment