July 9, 2018
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும் என அறிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா அடுத்த வாரம் லண்டன் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது தனிப்பட்ட பயணமொன்றின் அடிப்படையிலேயே அங்கு செல்லவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இவரது கருத்துக்கு நாட்டின் பல பகுதிகளிலும் பாரிய எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், வடக்கின் பல பகுதிகளிலும் இவருக்கு வரவேற்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
0 comments:
Post a Comment