July 25, 2018
நாட்டின் இன்றைய அரசாங்கத்தை கவிழ்ப்பதே தனது எதிர்பார்ப்பு என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடந்த வழக்கொன்றில் ஆஜராகிய பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே பசில் ராஜபக்ச இதனை கூறியுள்ளார்.
“அரசாங்கம், நாட்டுக்கு எந்த நன்மைகளையும் செய்யவில்லை. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. தோல்வி அச்சம் காரணமாக அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்து வருகிறது.
தேர்தலை தாமதப்படுத்தி வருவதன் காரணமாக தற்போதைய அரசாங்கத்தை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு” எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
Jaffna Muslim






0 comments:
Post a Comment