Wednesday, July 4, 2018

விஜயகலா குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - ராஜித்த

, 04 JULY 2018

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இணை அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இதன்போது , ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்திருந்தார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா தெரிவித்த கருத்தை  ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அது தவறான கருத்தாகும்.

மேலும் விஜயகலாவின் கருத்து தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது. அரசியலமைப்பு சட்ட விதி முறைகளுக்கமைய நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டில் முன்னர் காணப்பட்டது போன்ற தன்னிச்சையாக முடிவு எடுப்பதற்காக அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

அன்று நிலவிய ஆட்சி போன்றல்ல தற்போது நிலவும் ஆட்சி. தனிநபர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அன்று முடிவுகளை எடுத்தாற் போல் தற்போது தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க முடியாது.

இன்று ஜனநாயக ரீதியிலேயே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

விஜயகலா மகேஸ்வரன் அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு அரசாங்கத்துக்கு எதிராக விரலை நீட்டுவதாக குறிப்பிடுகிறீர்கள்.

அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு தவறுகளை சுட்டிக்காட்டுவதால் தவறேதும் இல்லை.

புலிகளின் காலத்தில் ஏனைய குற்றச்செயல்கள் இடம்பெறவில்லை என விஜயகலா குறிப்பிட்டுள்ளார், அதில் உண்மை உள்ளது.

அவர் குறிப்பிடுவது சரி, புலிகளின் காலத்தில் பயங்கரவாத செயற்பாடுகள் அன்றி ஏனைய குற்றச்செயல்கள் இவ்வாறு இடம்பெறவில்லை.

அக்காலப்பகுதியில் கொலை, கொள்ளை, துஷ்பிரயோகம் என்பன இவ்வாறு காணப்படவில்லை. இதனையே விஜயகலா குறிப்பிட்டுள்ளார்.

ஹிட்லரது காலத்தில் அவரால் மேற்கொள்ளப்பட்டதை தவிற வேறு குற்றச்செயல்கள் இடம்பெறவில்லை.

அவ்வாறே புலிகளின் காலத்தில் ஏனைய குற்றச்செயல்களை புரிய பயந்து இருந்தனர்.

இன்று எதற்கு எடுத்தாலும். ஆர்ப்பாட்டம் பேரணிகளை நடத்துகின்றனர் இதுவே இன்றைய நிலைப்பாடு என்றார்.

அரநாயக்க தேரர் கடந்த தினத்தில் ஹிட்லர் ஆட்சி தேவை என குறிப்பிட்டிருந்தார். இவற்றை கேட்க யாரும் இல்லை என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

0 comments:

Post a Comment