04 JULY 2018
நாவல திறந்த பல்கலைக்கழகத்திற்கு அருகில் அமைந்துள்ள கிளை வீதியொன்றில் சென்று கொண்டிருந்த பெண்ணொருவர் காட்டுப்பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டு கூரிய ஆயுதத்தால் கழுத்தறுக்கப்பட்டு அவரின் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிருலபனை காவற்துறை தெரிவித்துள்ளது.
27 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
நாவல பிரதேசத்தில் அமைந்துள்ள வேலைத்தளத்தில் இருந்து வீடு நோக்கி சென்றுக்கொண்டிருந்த போதே குறித்த பெண் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
சந்தேகநபர் குறித்த பெண்ணை இழுத்துக்கொண்டு காட்டுப்பகுதிக்கு சென்றுள்ள நிலையில் அங்கு அவரின் கழுத்தை கூரிய ஆயுதத்தால் அறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் , அவரின் ஒன்றரை பவுண் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ளார்.
சந்தேகநபருடன் சண்டையிட்ட குறித்த பெண் அவரின் இரண்டு விரல்களை கடித்து காயமேற்படுத்தியிருந்த நிலையில் , சந்தேகநபர் அதற்காக சிகிச்சை பெறுவதற்காக மருத்துவ நிலையமொன்றிற்கு வருகை தந்திருந்த போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் , சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் கூரிய ஆயுதம் மற்றும் தங்க சங்கிலி ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
கழுத்தறுக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , அவரின் நிலை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபர் புதுக்கடை இலக்கம் 3 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
0 comments:
Post a Comment