Wednesday, July 4, 2018

போலி முகப்புத்தகங்கள் தொடர்பில் முறையிடவும் ; இலங்கை கணனி அவசர அழைப்பு பிரிவின் செய்தி ..

July 04, 2018

போலி முகப்புத்தக கணக்குகள் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்யமுடியும் எனவும் அவ்வாறு பதிவு செய்யப்படும் பட்சத்தில் அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியளாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் போலி முகப்புத்தகங்கள் தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இதனால் போலி முகப்புத்தக கணக்குகளை முகப்புத்தக அமைப்பு நிறுத்தியுள்ளதாகவும் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியளாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்கள் தொடர்பாக கடந்த 2017 ஆம் ஆண்டில் மாத்திரம் 3600 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த வருடத்தில் 1250 முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை கணனி அவசர அழைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

  போலி முகப் புத்தக கணக்குகள் தொடர்பான முறைப்பாடுகளை 0112691692 என்ற தொலைப்பேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு தெரிவிக்கவும் முடியும்.

0 comments:

Post a Comment