Tuesday, July 24, 2018

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டவர்களின், சுகதுக்கங்களை கேட்டறிந்த ஞானசாரர்

July 24, 2018 

நாட்டில் ஏற்படப் போகும் அரசியல் மாற்றம் அழிவில்தான் முடியும் என கடந்த 2015 ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன்னரேயே நாம் தெளிவாக எடுத்துக் கூறினோம் எனவும், அதனையே நாடு தற்பொழுது அனுபவிப்பதாகவும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞான சார தேரர் தெரிவித்தார்.

திகன இனவாத சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு தற்பொழுது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் சுகதுக்கங்களை விசாரிப்பதற்கு இன்று (24) தேரர் உட்பட குழுவினர் போகப்பரைச் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர். இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இதனைக் கூறினார்.

மாற்றத்தை ஏற்படுத்திய மக்கள் மீண்டும் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு தேர்தல் ஒன்றை எதிர்பார்த்துள்ளனர். இந்த தேர்தலின் பின்னர் மக்களின் தீர்மானத்தைப் பார்க்கலாம் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.

Jaffna Muslim 

0 comments:

Post a Comment