July 04, 2018
கத்தாரில் பாவனைக்கு உதவான 95 000 கிலோ இறக்குமதி உணவுப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. கத்தார் சுகாதார அமைச்சின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையிலேயே இவ்வாறு உணவுப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய உணவுப் பொருட்கள் உட்பட இறக்குமதி செய்யப்பட்ட 95 000 கிலோ(95 தொன்) உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் உத்தியோக பூர்வ முகநூல் பக்கம் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற அனைத்து உணவுப் பொருட்களும் தரவாக பரிசோதனை செய்யப்பட்ட பின்பே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. குறிப்பாக விவசாய உற்பத்திப் பொருட்களே விசேட வகையாக பரிசோதனைகள் நடாத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்றதொரு பரிசோதனையின் போதே பழுதடைந்த நிலையில் காணப்பட்ட உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment