Saturday, June 23, 2018

மயிரிழையில் உயிர் தப்பிய சிம்பாபே ஜனாதிபதி

June 24, 2018

சிம்பாபே ஜனாதிபதி எம்மர்சன் நான்காவாவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் மயிரிழையில் அவர் உயிர் தப்பியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சிம்பாப்வே நாட்டில் ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் பிரதான வேட்பாளர்களிடையே பிரசாரம் சூடுபிடித்து வருகின்றது.

இந் நிலையில் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள புலாவாயோ நகரில் நேற்று(23) சிம்பாபே ஜனாதிபதியை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

இக்கூட்டத்தில், உரையை முடித்துவிட்டு மேடையில் இருந்து  இறங்கும் போது ஜனாதிபதியை நோக்கி குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

0 comments:

Post a Comment