17.06.2018
ஞானசார தேரரின் துறவி உடை அகற்றப்பட்டமைக்கு கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ சங்க சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சங்க சபையின் அனுமதி இன்றி தமது சங்கத்தின் உறுப்பினரான கலகொட அத்தே ஞானசார தேரரின் துறவி உடை அகற்றப்பட்டுள்ளது.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ சங்க சபை அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நீதியமைச்சருக்கு கடிதம் அனுப்பவுள்ளதாகவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.






0 comments:
Post a Comment