Saturday, June 16, 2018

கர்ப்பமாக இருக்கும் ஈழத்து மருமகள் பிக்பாஸ் வீட்டில்! சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த நடிகைகள்..? அதிர்ச்சியில் ரசிகர்கள்

June 17, 2018
   
பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர்கள் இவர்கள் தான் என சமூகவலைதளங்களில் பலரது பேர் அடிபட்டு வருகிறது.

கடந்தமுறை போலவே இம்முறையும் பிக்பாஸ் வீட்டில் வலது கால் எடுத்து வைத்து வாழப் போகிறவர்கள் யார் என்பதை, தயாரிப்புக் குழு ரகசியமாகத் தான் வைத்துள்ளது.

ஆனால், விடுவார்களா நெட்டிசன்கள். தங்களுக்கு பிடித்த அல்லது பிடிக்காத நபர்களின் பெயரை, இந்தப் பட்டியலில் கோர்த்து விட்டு வைரலாக்கி வருகின்றனர்.

அப்படியாக பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் என யூகித்து அதிகளவில் பகிரப்பட்ட சிலரைப் பற்றி பார்ப்போம்.
ரசிகர்களினால் இவர்கள் பெயர் குறிப்பிடப்பட்டாலும் இவர்கள் போட்டியில் கலந்து கொள்ள வில்லை என்று தெரிய வருகின்றது. இதனால், ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
சிம்ரன்
நடனம் மற்றும் நடிப்பினால் ரஜினியைத் தவிர தமிழின் முன்னணி நாயகர்களுடன் நடித்த பெருமைக்குரியவர் நடிகை சிம்ரன்.

குடும்பம், குழந்தைகள் என செட்டில் ஆனவர், தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் ஜோடியாக இவர் தான் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சிலர் பிக்பாஸ் வீட்டில் இவரும் வசிக்கப் போகிறார் எனக் கூறுகின்றனர். ரஜினியின் படத்தில் கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில், எப்படி அவரால் பிக்பாஸ் வீட்டில் சென்று 100 நாட்கள் இருக்க முடியும். எனவே, அவர் வருவது சந்தேகமே.

ரம்பா
சிம்ரனைப் போலவே நடனம் மற்றும் நடிப்பினால் தமிழ் ரசிகர்களைக் கட்டிப் போட்டவர் ஈழத்து மருமகள் நடிகை ரம்பா.

ரஜினி, கமல் என அவர் நடித்த காலத்தில் முன்னணியில் இருந்த அனைத்து ஹீரோக்களுடனுமே டூயட் ஆடியவர், பின்னாளில் திருமணம் ஆனதும் நடிப்பிற்கு பைபை சொன்னார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்ரியவர், தற்போது மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். அப்படி இருக்கையில், அவரும் பிக்பாஸ் போட்டியாளர் என சிலர் வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர்.

சினேகா
அடுத்தது சினேகா. அதிகம் பேரால் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டது, பகிரப்பட்டு வருவது இவரது பெயர் தான். மூன்று வயது சிறுவனுக்குத் தாயான சினேகா எப்படி குழந்தையை வீட்டில் விட்டு விட்டு வருவார் என்பதை அவர்கள் யோசிக்கவே இல்லை போலும்.

எனவே தான், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தனது சமூகவலைதளப் பக்கத்தில் தான் பிக்பாஸ் வீட்டிற்கு வரப்போவதில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார் சினேகா.

ஆனாலும், எப்படியும் அவரை பிக்பாஸ் வீட்டு போட்டியாளர் ஆக்கியே தீர்வது என கங்கணம் கட்டிக் கொண்டு அவரது பெயர் பட்டியலில் இருப்பதாக பரப்பி வருகின்றனர் சிலர்.

ராய்லட்சுமி
பிக்பாஸ் சீசன் 2 ஆரம்பிக்கப் போகிறது என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாவதற்கு முன்பிருந்தே, அதன் போட்டியாளர்கள் பட்டியலில் ராய்லட்சுமியின் பெயர் இருப்பதாக கிசுகிசுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அவரும் சளைக்காமல் தனது சமூகவலைதளப் பக்கத்தில், தொடர்ந்து இதற்கு மறுப்புத் தெரிவித்து வருகிறார் என்பது தனிக்கதை.

அபர்னதி
மிகக்குறுகிய காலத்தில் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அபர்னதி. ஆர்யாவின் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பலரது வீட்டு செல்லப்பிள்ளையாக மாறிப்போனவர் இவர்.

தற்போது இவர் நடிகையாகி விட்டார். தமிழில் டிராபிக் ராமசாமி படத்திலும், வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.

மனதில் பட்டதை பட்டென போட்டுடைப்பவர் என்பதால், இவர் பிக்பாஸ் போட்டியாளராக வர வேண்டும் என்பது பலரது விருப்பம்.

ஆனால், தற்போது தான் வளர்ந்து வரும் நடிகையான இவர், ‘முடிந்தால் நேரம் கிடைத்தால் ஒரு வாரம் பிக்பாஸ் வீட்டில் தங்கி பார்க்கிறேன். மற்றபடி முழுநேர போட்டியாளராக எல்லாம் வர முடியாது’ என நோ சொல்லி விட்டாராம்.

0 comments:

Post a Comment