June 25, 2018
ரஜப் தையிப் அர்தூகான் (Recep Tayyip Erdogan) இரண்டாவது தடவையாகவும் துருக்கியின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவுள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இதுவரையில் 99.2 சதவீதமாக வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. அதில் அர்தூகான் 52.5 சதவீதமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முஹாரம் இன்ஸ்சுக்கு (Muharrem Ince) 30.7 சதவீதமாக வாக்குகளே கிடைக்கப்பெற்றுள்ளன.
இதுவரையில் வெளியான தகவலின் படி அர்தூகான் வெற்றிப்பெற்றதாக கருதப்பட்டாலும் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமையே வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.






0 comments:
Post a Comment