June 25, 2018
இன்னும் இரண்டு மூன்று மாத காலத்திற்குள் தனது அமெரிக்க பிரஜாவுரிமையை நிறைவடையச் செய்து கொள்ள முடியும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
டீ.ஏ.ராஜபக்ஷ நூதனசாலை நிர்மாணிப்பின் போது இடம்பெற்றதாக கூறப்படும் பண மோசடி தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று நிதி மோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகியதை அடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அஸ்கிரிய பீடத்தின் துணை தலைவர் வெடருவே உபாலி தேரர் தனக்கு தனிப்பட்ட முறையில் தெரிவித்த கருத்தினை முன்வைத்து தெரிவிக்கப்படும் கூற்றுக்கள் சரியானதல்ல எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment