Sunday, June 17, 2018

ஞானசார தேரரை சிறையில் வைத்து படுகொலை செய்யத் திட்டம்

pm June 17, 2018

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை சிறையில் வைத்து படுகொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாக பொதுபல சேனா, சிங்களராவய, பெவிதி அமைப்பு உள்ளிட்ட பௌத்த பிக்குகள் தலைமையிலான சிங்கள கடும்போக்குவாத அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவிசந்தியா எக்னலிகொடவிற்கு அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்துவரும் கலகொட அத்தே ஞானசார தேரரை நலம் விசாரிக்க இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்ற பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

ஞானசார தேரரை விடுதலைசெய்யப்படாவிட்டால் நாடு தழுவிய ரீதியில் வன்முறைகள்வெடிக்கும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Daily ceylon

0 comments:

Post a Comment