Sunday, June 17, 2018

ஸ்ரீ ல.சு.க.யிலிருந்து தனிநபர்களாக வந்து பொதுஜன பெரமுனவுடன் இணையுங்கள்- பசில்

June 17 2018

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைய வருபவர்கள்  குழுவாக வராமல் தனி நபர்களாக வருவதையே விரும்புகிறோம் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேர் கொண்ட குழு, அரசாங்கத்திலிருந்து வெளியேறி  கூட்டு எதிர்க் கட்சியில் இணைந்து கொண்டு மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதுWt455 li u தலைமைத்துவத்தையும் ஏற்று ஸ்ரீ ல.சு.க.யில் அங்கம் வகிப்பதாகவும் கூறி வருகின்றது. இதனால், கூட்டு எதிர்க் கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளன.

இந்நிலையிலேயே இவர் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment