Thursday, June 21, 2018

கடமையைப் புறக்கணிக்கும் தபால் ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை- தபால் மா அதிபர்


June 22, 2018

தபால் ஊழியர்களில் சேவைக்கு சமூகமளிக்கும் பணியாளர்களுக்கு மாத்திரமே ஜூன் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என தபால் மா அதிபர் டீ.எல்.பீ ரோஹண அபேரத்ன அறிவித்துள்ளார்.
இன்னும் பணிக்கு திரும்பாமல் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை உடனடியாக மீண்டும் பணிக்கு திரும்புமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பணிக்கு திரும்பாமல் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ஜூன் மாதம் 01 ஆம் திகதி முதல் 11ம் திகதி வரையான நாட்களுக்கு மாத்திரமே சம்பளம் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

0 comments:

Post a Comment